தேசிய செய்திகள்
காஷ்மீரில் 2 மலையேற்ற வீரர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்ட இந்திய விமானப்படை
தேசிய செய்திகள்

காஷ்மீரில் 2 மலையேற்ற வீரர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்ட இந்திய விமானப்படை

தினத்தந்தி
|
3 July 2023 5:33 AM IST

தகவல் கிடைத்த ஒரு மணி நேரத்திற்குள் இரண்டு நபர்களும் பத்திரமாக மீட்கப்பட்டதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

ஸ்ரீநகர்,

காஷ்மீரின் சோனாமார்க் பகுதியில் உள்ள தாஜிவாஸ் பனியாற்றில், பைசல் வானி மற்றும் ஜீஷன் முஷ்டாக் ஆகிய 2 மலையேற்ற வீரர்கள் காயமடைந்த நிலையில் சிக்கித் தவித்தனர். இது குறித்து இந்திய விமானப்படைக்கு தகவல் கிடைத்த நிலையில், அவர்கள் இருவரும் விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இது குறித்து பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில், "இந்திய விமானப்படையின் ஏ.எல்.ஹெச். எம்.கே3 ஹெலிகாப்டர் மூலம் தஜிவாஸ் பனியாற்றில் இருந்து காயமடைந்த இரண்டு மலையேறுபவர்கள் சரியான நேரத்தில் மீட்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் பல எலும்பு முறிவுகள், உறைநிலை மற்றும் பிற காயங்களுக்கு ஆளாகியிருந்தார்" என்று தெரிவித்தார்.

மேலும் இந்திய விமானப்படைக்கு இது தொடர்பாக தகவல் கிடைத்த ஒரு மணி நேரத்திற்குள் இரண்டு நபர்களும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு பத்திரமாக கொண்டு செல்லப்பட்டனர் என்று பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.



மேலும் செய்திகள்